விண்ணப்பதாரர்கள் ஆதார் எண்ணை தங்களின் நிரந்தர பதிவுடன் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஆனது தற்போது ஒரு செய்தி குறிப்பினை வெளியிட்டுள்ளது. அதன் தகவல்களை கீழே அறிந்து கொள்ளலாம்.
நிரந்தர பதிவு !
தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் ஒவ்வொரு விண்ணப்பதாரர்களுக்கும் ஓர் நிரந்தர பதிவு இருக்கும். அதில் விண்ணப்பதாரர்கள் தங்களின் விவரங்களை வேலைவாய்ப்பிற்காக பதிவு செய்து வைப்பர். அந்த நிரந்தர பதிவு ஆனது மாறுதலுக்கு உட்படாததாக இருக்கும்.
ஆதார் எண் பதிவு !
அவ்வாறு தேர்வாணையத்தில் நிரந்தர பதிவு செய்திருப்போர் அதில் தங்களின் ஆதார் எண்ணையும் இணைக்க வேண்டும் என ஏற்கனவே தேர்வாணையம் மூலமாக அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது மீண்டும் அது குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு ஆதார் எண்ணை, ஒரு நிரந்தர பதிவிற்கு மட்டுமே பயன்படுத்த முடியும். ஆதார் சட்ட விதிமுறை படி, பதிவுதாரர்களின் ஆதார் தகவல்கள் தேர்வாணையத்தால் சேமிக்கப்பட்டாது.
ஆதார் எண்ணை பதிவு செய்வதற்கான வழிமுறைகள் அனைத்தும் தேர்வாணையத்தின் இணைய பக்கத்தில் வழங்கப்பட்டுள்ளது. அதில் விண்ணப்பதாரர்கள் Feedback அளிக்கவும் வசதிகள் செய்யப்பட்டுள்ளது. எனவே விண்ணப்பதாரர்கள் விரைவில் தங்களின் ஆதார் எண்ணை இணைத்துக் கொள்ளும்படி அறிவுறுத்துகிறோம்.
TNPSC Official Website
Latest Govt Jobs
-
Last Date : 22.04.202110th, Diploma, Any Degree
-
-
Last Date : 20.05.202110th, 12th, Diploma, Bachelor Degree
-
Last Date : 21.05.2021Diploma, B.Tech, Engineering
-
Last Date : 15.04.202110th, 12th, Bachelor Degree
-
Last Date : 02.05.202110th, 12th, Any Degree
-
-
Last Date : 18.04.2021BE, B.Tech, Diploma, Bachelor Degree