தமிழகத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளை திறப்பது மேலும் தாமதமாக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகி வருகின்றன.
தொற்றின் அபாயம் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளதாக தெரிகிறது. இது குறித்த தகவல்களை கீழே எங்கள் இணையதளம் மூலமாக அறிந்து கொள்ளலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள்
பொது முடக்கம் !
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலின் காரணமாக தடுப்பு நடவடிக்கைகள் கடந்த மார்ச் மாதம் முதல் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அவற்றில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை மூடியதும் ஒன்றாகும். இதனால் மாணவர்களுக்கு கடந்த கல்வி ஆண்டிற்கான இறுதி தேர்வுகளே நடைபெறவில்லை. 11 மற்றும் 12 வகுப்பு மாணவர்களை தவிர அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு முந்தைய காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகளின் அடிப்படையில் தான் தேர்ச்சி வழங்கப்பட்டது.
ஆன்லைன் வகுப்புகள் :
அடுத்த கல்வி ஆண்டு தொடங்கப்பட்டாலும் ஆன்லைன் வகுப்புகள் வழியாகத்தான் இன்றளவும் பாடங்கள் நடத்தப்படுகிறது. ஒரு சில பள்ளிகளில் மட்டும் மாணவர்களுக்கு தேர்வுகள் நடத்தப்பட்டது. ஆனாலும் தமிழகத்தில் பெரும்பாலான பள்ளிகள் இன்னும் திறக்கப்படவில்லை. மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகளுக்கான நெறிமுறைகள் தான் வெளியானதே தவிர பள்ளிகள் திறப்பிற்கான அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை.
பள்ளிகள் திறப்பு ?
இந்நிலையில் வரும் நவம்பர் 16ம் தேதி முதல் 09-12 வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளை திறக்க அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவிட்டு இருந்தது. ஆனால் அந்த அறிவிப்பும் திரும்ப பெறப்பட்டு விட்டது. தற்போது தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளை திறந்தால் தொற்று அதிகரிக்கும் என்பதால் டிசம்பர் மாதத்துக்கு பின் திறக்க அரசு முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் மூலம் ஆன்லைன் வகுப்புகளே இன்னும் சில காலத்திற்கு நீடிக்கும் என தெரிகிறது.
இரண்டாம் அலை !
பள்ளிகள் கல்லூரிகளை திறந்தால் தமிழகத்தின் கொரோனா பரவலின் இரண்டாம் அலை ஏற்படும், என எதிர்க்கட்சி உட்பட பல்வேறு தரப்புகளில் இருந்து அரசிற்கு கடும் எதிர்ப்புகள் வெளியாகி வருகிறது. இதனால் பள்ளிகளை நவம்பர் மாதத்தில் திறப்பதற்கு பதிலாக பொங்கல் விடுமுறைக்கு பிறகு திறக்கலாம் எனவும் ஆலோசிக்கப்பட்டு வருவதாக சில தகவல்கள் வெளியாகின்றன.
Latest Govt Jobs
-
Last Date : 22.04.202110th, Diploma, Any Degree
-
-
Last Date : 20.05.202110th, 12th, Diploma, Bachelor Degree
-
Last Date : 21.05.2021Diploma, B.Tech, Engineering
-
Last Date : 15.04.202110th, 12th, Bachelor Degree
-
Last Date : 02.05.202110th, 12th, Any Degree
-
-
Last Date : 18.04.2021BE, B.Tech, Diploma, Bachelor Degree