Job Details

TET வெயிட்டேஜ் முறையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆசிரியர் ப

Last Dates : 28.11.2020
TET,
TET வெயிட்டேஜ் முறையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு
TET வெயிட்டேஜ் முறை பரிசீலினை !

தமிழகத்தில் TET வெயிட்டேஜ் முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆசிரியர் பணிகள் வழங்குவது குறித்து பரிசீலினை செய்ய இருப்பதாக தமிழக பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் தற்போது விளக்கம் அளித்துள்ளார்.

Image result for join our whatsapp group

TET தேர்வு !

தமிழக ஆசிரியர் தேர்வு வாரியமானது தமிழககும் முழுவதும் காலியாக உள்ள ஆசிரியர்கள் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு வருடந்தோறும் தேர்வுகளை நடத்தி வருகிறது. அந்த தேர்வுகளில் 90 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்தாலே பணி நியமனம் கிடைப்பது ஏறக்குறைய உறுதி ஆகிவிடும்.

ஆனால் தற்போது வெயிட்டேஜ் முறை ஆனது கடைபிடிக்கப்படுகிறது. இதன் காரணமாக அதிக மதிப்பெண்கள் எடுத்தும் பலருக்கு அரசு வேலை கிடைப்பது அரிதாகிவிட்டது. 90 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்தும் இந்த வெயிட்டேஜ் முறையினால் ஆசிரியர்கள் பணிகள் கை நழுவி செல்வதாக தேர்வர்கள் மிகவும் வருத்தம் தெரிவித்தனர்.

TET வெயிட்டேஜ் முறை பரிசீலினை !

எனவே தேர்வுகளில் 90 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்தும் வெயிட்டேஜ் முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆசிரியர் பணிகள் வழங்குவது குறித்து பரிசீலினை செய்ய இருப்பதாக தமிழக பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் தற்போது அறிவித்து உள்ளார்.

தமிழகத்தில் தற்போது பள்ளிகள் திறக்க வாய்ப்பு இல்லை – அமைச்சர் அறிவிப்பு !

மேலும் தமிழகத்தில் பள்ளிகளை திறப்பதற்கு நேரம் இதுவல்ல எனவும் விளக்கம் அளித்து உள்ளார். ஏற்கனவே பள்ளிகள் திறப்பு குறித்து தமிழக அரசு பதில் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

To Get Free Govt Job Alert : Click Here to Subscribe